<%@ Language=JavaScript %> Welcome./\. Welcome. !
 

எங்கள் தேசம் இணையம்

 

www.engaltheaasam.com Welcome To Visit   

 
 

 

 

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.செப்டம்பர்,01, 2009

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

வணக்கம்! இதயவீணையின் இன்றைய முக்கிய செய்திகள்!!.01.09.2009

வணக்கம்! இதயவீணையின் செய்திகள்!! 01.09.2009
செய்தி ஆசிரியர் :- ஷோபா
வாசித்தளிப்பவர் :- சுபாஷினி
முதலில் தலைப்புச் செய்திகள்!!!



முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் புனரமைப்புப் பணிகளுக்கு என 160 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

லிபியாவின் சுதந்திர தினக் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

நலன்புரி முகாம்களிலுள்ள புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளிற்காக 20 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வன்னியில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு சர்வதேச நாடுகளது ஒத்துழைப்பு அவசியம் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசு10ரிய தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 18 கிராமங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைத் துரித கதியில் புனரமைப்புச் செய்வதற்காக அரசாங்கம் 160 கோடி ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில்;மேற்கொள்ளப்பட வேண்டிய சகல புனரமைப்பு வேலைகளையும் தாமதமின்றி துரிதகதியில் ஆரம்பிப்பதற்கு தேவையான சகல அறிவுறுத்தல்களையும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ வழங்கியுள்ளதாகவும் இந்த நிதி ஒதுக்கீடானது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கல்வி சுகாதாரம் மின்சாரம் பொதுவசதிகள் உட்பட சகல துறைகளையும் மேம்படுத்தவென மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் சுகாதார துறைக்கு 487.4 மில்லியன் ரூபாவும் மின்சாரத்திற்கு 451 மில்லியனும் வீதிகளின் அபிவிருத்திக்கு 402.82 மில்லியக் ரூபாவும் கல்வி துறைக்கு 90 மில்லியனும் கமநல சேவை நீர்ப்பாசனத்துறை விவசாய அபிவிருத்தி நன்னீர் மீன்வளர்ப்புத்துறை ஆகியவற்றிற்கு 178.5 மில்லியன் ரூபாவும் கூட்டுறவு துறை மாவட்ட நிர்வாகக் கட்டிடத் திருத்தம் பிரதேச செயலகக் கட்டிடத் திருத்த வேலைகளுக்கு 89.2 மில்லியன் ரூபாவும் ஏனைய துறைகளுக்கு 74 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-------------------------

லிபியாவின் 40வது சுதந்திர தினக் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நேற்று அந்நாட்டிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

லிபியத் தலைவர் கேர்னல் முஅம்மர் அல்கடாபியின் அழைப்பின் பேரில் சென்றுள்ள ஜனாதிபதியை அந்நாட்டின் திட்டமிடல் அமைச்சர் அப்துல் ஹபீத் அல்-ஸ்லாட்னி திரிபோலி நகரிலுள்ள மடிகா விமான நிலையத்தில் வரவேற்றுள்ளதாகவும் ஜனாதிபதி அண்மையில் லிபியாவிற்குச் சென்றிருந்த சமயம் இரு நாடுகளுக்குமிடையில் இணக்கம் காணப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லிபியாவின் 40வது சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்றும் அங்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

---------------------

மன்னார் மாவட்டத்தில் மூன்று பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மிகவேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3,அபிவிருத்தித் திட்ட வேலைகள் இவ்வருட இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன் சுமார் 190 கோடி ரூபா செலவில் மன்னாரில் இரட்டை வழிப்பாலம் அமைக்கப்பட்டு வருவதாகவும் 63 கோடி ரூபா செலவில் நகர வடிகான் அமைப்பு வேலைகள் இடம்பெற்று வருவதுடன் ஏ-14 வீதி 40 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து வேலைத்திட்டங்களும் இவ்வருட இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

---------------------

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸைநாயகத்திற்கு உயர் நீதிமன்றத்தினால் 20 வருட காலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையிலான ஆக்கங்களை ஊடகங்களில் வெளியிட்டார் என்னும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸைநாயகத்துக்கு உயர்நீதிமன்றம் 20 வருட கால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்; தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டபோதே இத்தீhப்பு வழங்கப்பட்டது.

---------------------------

ஆசியப் பிராந்திய உள்நாட்டு மருத்துவ சேவை மேம்பாடு தொடர்பான மாநாட்டில் பங்குபற்றுவதற்காக சுதேச வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரலியத்த நேற்று தாய்லாந்திற்குப் பயணமாகியுள்ளார்.

உள்நாட்டு மருத்துவ சேவையை மேம்படுத்துதல் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்படவிருக்கும் இம்மாநாட்டில் ஆசிய நாடுகள் பல பங்குபற்றுவதாகவும் தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் நடைபெறும் இம்மாநாடு நாளை முடிவடையவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

----------------------

பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென 20 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்பின் பேரில் வடக்குلل கிழக்குப் பிரதேசங்களில் நிறுவப்படவுள்ள இப்புனர்வாழ்வு நிலையங்களில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 10,000 பேருக்கு புனர்வாழ்வு வழங்கப்படவுள்ளதாகவும் இவர்களில் 1,777 பெண் உறுப்பினர்களும் 565 பாடசாலை மாணவர்களும் அடங்குவதாகத் தெரிவித்துள்ளதுடன் பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இங்கு சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இவர்களது செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் முழுமையாக மாற்றியமைத்து சமாதான சிந்தனையுடன் வாழ்வதற்குத் தேவையான வகையில் உச்சகட்ட புனர்வாழ்வு வழங்குவதே இந்நிலையங்களின் பிரதான நோக்கம் என்றும் பெருந்தொகையானவர்களுக்கு இது போன்ற புனர்வாழ்வு வழங்கப்படுவது உலகிலேயே இதுவே முதற் தடவையாகும் எனத் தெரிவித்துள்ள புனர்வாழ்வு ஆணையாளர் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதின் பின்னர் அரசாங்கம் முன்னெடுத்து வரும் புனர்வாழ்வு திட்டத்தைப் பாராட்டும் வகையில் உலகின் பல நாடுகள் மற்றும் முன்னணி அமைப்புக்கள் என்பன இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

-------------------------

புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட திருகோணமலையின் தென்பகுதிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க தலைமையில் உயர் அதிகாரிகள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

சம்பூர் தோப்பூர் கிண்ணியா உட்பட முக்கிய கடற்படை நிலைகளுக்கு விஜயம் செய்த அவர் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிவில் நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளதாகவும் சம்பூரிலுள்ள கடற்படை ஆட்சேர்ப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த அவர் அங்கு பயிற்சி பெற்றுவரும் கடற்படை வீரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா தோப்பூர் கடற்படை நிலைகளையும் சென்று பார்வையிட்டதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகக் கூடிய கவனம் செலுத்திய கடற்படைத் தளபதி அந்த தளங்களின் தனிப்பட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் அதனை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

---------------------

மட்டக்களப்பு தொப்பிகலை பிரதேசத்தை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட கால்நடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு குறிப்பிட்ட உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

2006-2007 காலப் பகுதிகளில் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பிரதேசத்திலிருந்து வெளியேறிய மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து கைவிடப்பட்ட கால்நடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான அனுமதியை ஈரளற்குளம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் ரி.ஏ.விஜயவர்தன வழங்கியுள்ளார்.

மிதி வெடி அகற்றப்பட்டுள்ளதை உறுதிபடுத்தி சான்றிதழ் கிடைக்கப் பெற்றுள்ள 13 இடங்களைக் குறிப்பிட்டு அந்த இடங்களில் கால்நடைகளைத் தேடிச் செல்வதற்கும் மேய்ச்சலுக்கு விடவும் அவர் அனுமதி வழங்கியுள்ளதுடன் ஏனைய இடங்களில் மிதி வெடி அகற்றப்பட்டுள்ளமை தொடர்பான சான்றிதழ் கிடைத்த பின்னரே அங்கு செல்வதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

--------------------------

வன்னியில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு சர்வதேச நாடுகளது ஒத்துழைப்பு அவசியம் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசு10ரிய தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆறாவது பசுபிக் இராணுவத் தளபதிகளின் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை தற்போது இலங்கை இராணுவப் படையினரே அதிகமாக மேற்கொண்டு வருவதாகவும் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க சகல நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் புலிகளுடனான யுத்தத்தில் கிடைக்கப் பெற்ற வெற்றி தொடர்பில் ஆய்வுகளை நடாத்தلل தமது உயர் பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பி வைப்பதற்குப் பல நாடுகள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

----------------------

புலிகளின் சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரை கல்கிஸை பகுதியில் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் புலிகள் அமைப்பில் கடந்த 19 வருடங்களாக இருந்துள்ளதாகவும் வெளிநாடு ஒன்றிற்கு தப்பி செல்லும் நோக்கில் கல்கிஸை விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது பொலிஸார் கைது செய்துள்ளதாகவும்لل பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 07 முக்கிய தாக்குதல்களை இவர் வழிநடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----------------------

ஜப்பானின் புதிய பிரதமராக இன்னும் இரு வாரங்களின் பின்னர் பதவியேற்கவுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவர் யுகியோ ஹடோயாமாவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

உங்கள் தலைமையில் ஜப்பானில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்னும் எதிர்பார்ப்பில் மக்கள் உங்கள் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் நீங்கள் அடைந்துள்ள வரலாற்று வெற்றியானது ஜப்பானில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு வழியமைக்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையில் பல நூற்றாண்டு கால சரித்திர மற்றும் கலாசாரத் தொடர்புகள் உள்ளதாகவும் எமது இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் ஜப்பான் வழங்கிய தாராள உதவிகளுக்காகத் தாம் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர நல்லுறவு எதிர்காலத்தில் மேலும் பலமடையும் என நம்புவதாகவும் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

---------------------

தென் மாகாண சபைக்கான தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 29,30 ஆகிய திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க இன்று அறிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாண சபைக்கான தேர்தல் ஒக்டோபர் 10 ம் திகதி நடைபெறவுள்ளதுடன் இத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பிரசாரப் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

--------------------

வவுனியா பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 18 கிராமங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பிரதேச செயலாளர் ஏ.சிவபாதசுந்தரன் தெரிவித்துள்ளார்.

ஓமந்தை அரசமுறிப்புக்குளம் வேப்பங்குளம் நொச்சிமோட்டை இளமருதங்குளம் மருதங்குளம் கற்பகபுரம் போன்ற கிராமங்களிலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று தமது காணிகளைத் துப்பரவு செய்வதிலும் தற்காலிக கொட்டில்கள் அமைப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வவுனியா பிரதேச செயலாளர் இந்தக் கிராமங்களைச் சேர்ந்த பாடசாலைகள் வீதிகள் மற்றும் குளங்கள் என்பவற்றைப் புனரமைக்கும் பணிகளில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மீளக்குடியமர்த்தப்படவுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு வசதியாக அங்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைகள் நிறுவப்பட்டு வருவதாகவும்لل தற்காலிகக் கொட்டில்களை அமைப்போருக்குத் தேவையான கூரைத் தகடுகள் வழங்கப்படுவதுடன் சொந்த இடங்களுக்குச் செல்லும் போது மீள்குடியமர்ந்த மக்களுக்கு 25 ஆயிரம் ரூபா நிதி வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா பிரதேச செயலாளர் சிவபாதசுந்தரன் மேலும் தெரிவித்துள்ளார்.

------------------

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பல்வேறு பாரிய நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இரணைமடு குளக்கட்டு அமைந்துள்ள பகுதியில் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்வுதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதனூடாக இப்பகுதியில் பல மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளக் கூடியதாக அமையும் எனவும் புதிய நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 103.99 மில்லியன் ரூபா செலவில் வறுகையாறு திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 138 ரூபா செலவில் யாழ்.மாவட்டத்தில் மேலும் பல நீர்ப்பாசன விவசாய மற்றும் சிறுபயிர்ச் செய்கை போன்றவையும் அபிவிருத்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 28.66 மில்லியன் ரூபா செலவில் 11 திட்டங்கள் அடங்கிய உவர்நீரை நன்னீராக்கும் பாரிய செயற்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் யாழ்.மாவட்டத்திலுள்ள இரு சிறிய நீர்ப்பாசனக் குளங்களும் 3.4 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----------------

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 39 பேர் பலியான சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நீதிமன்றத்தின் முன்னிலையில் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.

குறித்த சந்தேக நபரை விசேட பாதுகாப்புடன் அநுராதபுரச் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு அநுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் கொலைச் சம்பவத்தில் பலியானவர்களின் படுகொலை தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக ரகசிய பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

<<முன்னைய பதிவுகள்>>

 

Last update: 20-06-2008. Desigin and Copyright Welcome. to Visit.Engaltheaasam.com ..!