<%@ Language=JavaScript %> Welcome./\. Welcome. !
 

எங்கள் தேசம் இணையம்

 

www.engaltheaasam.com Welcome To Visit   

 
 

 

 

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.செப்டம்பர்,02, 2009

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

வணக்கம்! இதயவீணையின் இன்றைய முக்கிய செய்திகள்!!.02.09.2009

வணக்கம்! இதயவீணையின் செய்திகள்!! 02.09.2009
செய்தி ஆசிரியர் :- ஷோபா
வாசித்தளிப்பவர் :- அனுஷா
முதலில் தலைப்புச் செய்திகள்!!!



வடகிழக்கில் வாழும் தமிழ் சமூகங்களுடன் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதினூடாக நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லிபியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானிய பிரதமர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

தோற்கடிக்க முடியாததெனக் கருதப்பட்ட பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஓர் ஒப்பற்ற தலைவர் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி குளோரியா அரோயோ தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் 30,ஆயிரம் குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் பழமரச் செய்கையினை ஊக்குவிக்கும் நோக்குடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இனிப்பு தோடை உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.

அபிவிருத்தியின்றி சமாதானம் இல்லை நாட்டின் பொருளாதாரத்தை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் சமூகங்களுடன் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதின் ஊடாக இந்த நாட்டில் நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்திய ஒரு தலைவராக இருப்பதையே தாம் விரும்புவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்துள்ளதாகவும் இனி நாம் இந்த நாட்டை அபிவிருத்தியின் பாதையில் இட்டுச்செல்லும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் தான் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதால் மக்களை சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் பறங்கியர் என வேறுபடுத்திப் பார்ப்பதற்கு விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை நேசிப்பவர்கள் என்றும் நாட்டை நேசிக்காதவர்கள் என்றுமே வேறுபடுத்திப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தேவையான சந்தர்ப்பங்களில் தான் தமிழிலும் பேசுவதாகவும் தமிழ் மக்களது சொந்த மொழியிலேயே பேசுவதன் மூலம் அவர்களுடன் மிகநெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி யுத்தகால சூழ்நிலையிலும் நாட்டின் பொருளாதாரம் வருடாந்தம் ஆறு வீத வளர்ச்சியைக் காண முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் மத்திய வங்கியின் அறிக்கைகளின்படி கடந்த நான்கு ஆண்டுகளில் 11 வீதமாக இருந்த பணவீக்கம் 1.1 வீதத்திற்குக் குறைவடைந்துள்ளதாகவும் தலாவீத வருமானம் 1200 டொலர்களில் இருந்து 2000 டொலர்கள் வரை உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எமது நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதையே விரும்புவதாகவும் உணவில் நாம் தன்னிறைவு அடைய முடியுமாக இருந்தால் கைத்தொழில் துறையில் தானாகவே முன்னேற்றம் காண முடியும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்து போனவற்றை ஆராய்ந்து கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல எனக் கருதுவதாகவும் கடந்து போனவற்றை மறந்து புதியதோர் வாழ்க்கையை புதிய சிந்தனைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

----------------------------

யாழ்.மாநகர சபை மேயராக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவையும் பிரதி மேயராக என்.இளங்கோவையும் நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதாக நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளருக்கு அவர்களது பெயர் விபரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் மேயர் பிரதி மேயர்களுக்கான பெயர்களை ஈ.பி.டி.பி. சிபார்சு செய்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதி மேயர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடி இது குறித்து ஆராய்ததுடன் ஈ.பி.டி.பி. சிபார்சு செய்திருந்த இருவரையும் நியமிப்பதற்கு முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் பெருமளவு முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் பிரதி மேயர் பதவியை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவது தொர்பாக ஈ.பி.டி.பி.க்கும்لل அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்குமிடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் மேலும் தெரிவித்துள்ளார்.

--------------------------

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தென்மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு நேற்று கொழும்பு மகாவலி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து உரை நிகழ்த்திய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த மாநாட்டை இன்று நடாத்துவதற்கே முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் தென் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் இந்த மாநாட்டில் வெளிநாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள சுதந்திரக் கட்சிக் கிளைகளின் பிரதிநிதிகள் அடங்கலாக சுமார் 100 பேர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் இருந்து சுமார் 5,000 கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ள இம்மாநாட்டில் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அடையாள அட்டைகளும் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

----------------------

லிபிய தலைநகர் திரிபோலியில் நடைபெறும் அந்நாட்டின் 40வது சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ரசா கிலானியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக வருகை தந்திருக்கும் பல வெளிநாட்டுத் தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதுடன் பாகிஸ்தான் பிரதமருடன் நடாத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்குமிடையில் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கு இரு தரப்பு கலந்துரையாடல்களின் முக்கியத்துவம் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை அதனூடாக ஏற்படும் இராஜதந்திர உறவுகள் நாடுகளுக்கிடையில் வர்த்தக பொருளாதார சமூக உறவுகளை வலுப்படுத்துவதற்கு காரணமாக அமையும் எனப் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தகவல் மற்றும் தொடர்புசாதன தொழில்நுட்பப் பரிமாற்று வேலைத் திட்டமொன்று இரு நாடுகளுக்குமிடையில் செயற்படுத்துவதற்கும் இலங்கையில் செயற்படுத்தப்பட்டு வரும் ஈ அறிவகம் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு பாகிஸ்தான் அரசின் மூலம் தகவல் தொழில்நுட்ப வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் இச்சந்திப்பின்போது கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--------------------------------

தோற்கடிக்க முடியாததெனக் கருதப்பட்டு வந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஓர் ஒப்பற்ற தலைவர் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி குளோரியா அரோயோ தெரிவித்துள்ளார்.

லிபியாவின் 40வது சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய சமயம் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதுடன் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச ரீதியாகவும் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய ரீதியிலும் போராடுவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு பாதுகாப்புப் படையினருக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்கியமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பாராட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

-------------------------------

பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தக விநியோகம் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எனக் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் விநியோக நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்காக 1,054 புத்தக விநியோக மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் 9,662 அரசாங்கப் பாடசாலைகளிலுள்ள மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ள கல்வியமைச்சு அரச பாடத்திட்டங்களை அமுல்படுத்தும் தனியார் பாடசாலைகளுக்கும் இந்தப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளைلل அடுத்த வருடம் 30 மில்லியன் பாடப் புத்தகங்களை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதற்கென அரசாங்கம் 2,700 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

-----------------------------

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் 30 ஆயிரம் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கான உட்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த இரு மாவட்டங்களிலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகள் என பாதுகாப்புப் படையினரால் அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர் 30 ஆயிரம் குடும்பங்களைக் குடியேற்ற முடியும் எனத் தெரிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாண்டியன்குளம் துணுக்காய் மாந்தை கிழக்கு ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கிளிநொச்சி நகரின் வைத்தியசாலை அரச செயலகம் ஆகியவற்றின் திருத்த வேலைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த இரு மாவட்டங்களிலும் பாதுகாப்புப் படையினர் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளில் அபிவிருத்திக்காக புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ள முல்லைத்தீவு அரசாங்க அதிபர் அரச திணைக்களங்களின் அலுவலகங்கள் வீதிகள் நீர்ப்பாசனக் குளங்கள் பாடசாலைகள் என்பன இந்த மாவட்டங்களில் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

-----------------------------

யாழ்ப்பாணம் உரும்பிராய் அச்செழுவில் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளார்.

அச்செழுப் பிரதேசத்தில் நேற்று மாலை 5.00 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மர்மப் பொருள் ஒன்றினை எடுத்து உடைப்பதற்கு முயன்ற சமயம் அப்பொருள் வெடித்ததில் அச்செழு குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த 11 வயதான ஸ்ரீவரதன் லதிகரன் பலியாகியுள்ளதாகவும் சகோதரர்களான 8 வயதான ஜெகதீஸ்வரன் சாலினி 7 ஜெகதீஸ்வரன் அகிலன் ஆகிய இருவரும் படுகாயமடைந்த றிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளைச் சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

-------------------------------

நாட்டிலுள்ள கடலோரப் பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை அலாரம் தற்போது பரீட்சிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று முற்பகல் பாணந்துறை களுத்துறை மக்கோன மற்றும பேருவளை ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள எச்சரிக்கை கோபுரங்களிலிருந்து அலார ஒலி பரீட்சிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் தினங்களில் கம்பஹா புத்தளம் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை அம்பாந்தோட்டை மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் இப்பரீட்சார்த்தங்களை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கிலும் 48 கோபுரங்கள் தற்போது நிறுவப்பட்டுள்ளதாகவும் மேலும் 50 கோபுரங்களை எதிர்வரும் ஆண்டில் நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச அவசர தொழில்நுட்ப மையம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் என்.பி.வெரகம இதனடிப்படையில் முதலாவது அலாரம் சுனாமிக்கான சாத்தியக்கூறு இருப்பதாக மக்களை விழிப்படையச் செய்யும் எனவும் இரண்டாவது அலாரம் பிரதேசத்தின் நிலைமையின் அடிப்படையில் ஒலிக்கும் எனவும் மூன்றாவது அலாரம் சுனாமி வருவதை உறுதிப்படுத்தும் எனவும் மூன்றாவது அலாரம் கேட்டவுடன் மக்கள் வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

------------------------------

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள அகதி மக்களுக்கு சர்வதேச தரத்தில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உலகில் உள்ளக இடப்பெயர்வுகள் ஏற்பட்டுள்ள எந்தவொரு நாட்டிலும் இலங்கையில் போன்று வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை எனச் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு முறையான வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை என்னும் குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரிப்பதாகவும் இது புலிகளின் பிரசார செயற்பாட்டின் ஒரு அங்கம் எனத் தெரிவித்துள்ளதுடன் தகுதியுள்ள டாக்டர்கள் 100 பேர் நலன்புரி நிலையங்களில் பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட பிரதேசங்களில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் சகல வசதிகளுடனும் அகதி மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் எனவும் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட்டு பொருளாதார கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்படவுள்ளதாகவும் சாத்தியமானளவு விரைவாக இந்த மக்களை மீள்குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மக்களை மீள்குடியேற்றும் போது கண்ணிவெடி அகற்றல் தொடர்பான சான்றிதழ் பெறப்பட வேண்டும் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

-----------------------------

புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் உதவியாளரான பெண் புலி உறுப்பினர் ஒருவர் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றிற்கு தப்பிச் செல்வதற்குத் திட்டமிட்ட நிலையில் வெள்ளவத்தையிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த சமயமே அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பெண்ணின் கணவரும் புலி முக்கியஸ்தர் என்பதுடன் வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது கொல்லப்பட்டுள்ளதாகவும் வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புலி முக்கியஸ்தர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே தமிழ்ச்செல்வனின் உதவியாளரான இந்தப் பெண் புலி உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

----------------------------

யாழ்.மாவட்டத்தில் பழமரச் செய்கையினை ஊக்குவிக்கும் நோக்குடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இனிப்பு தோடை உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாகக் கண்டி விபுலையிலுள்ள விவசாயப் பண்ணையிலிருந்து இனிப்பு தோடம்பழ மரக்கன்றுகள் ஒரு தொகுதி குடாநாட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பிற்கிணங்க இனிப்பு தோடை உற்பத்தி செய்யவுள்ள விவசாயிகளுக்கு ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குவதற்கு விவசாய திணைக்களம் தயாராகவுள்ளதாக அதன் யாழ்.பிராந்திய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வடமராட்சி கரணவாய் தென்மராட்சி நுணாவில் மேற்கு மற்றும் வலிகாமம் ஆவரங்கால் மேற்கு ஆகிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பழ உற்பத்தியாளர்களுக்கு ஒருவருக்கு 32 இனிப்புத் தோடைக் கன்றுகள் என்னும் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

இத்தோடம்பழச் செய்கையில் ஈடுபட்டுள்ள பயனாளிகளுக்கு மானியமாக தலா 2,400 ரூபாவும் இலவசமாக கத்தரிக்கும் உபகரணங்களும் விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

-----------------------------

வவுனியா நலன்புரிக் கிராமங்களிலுள்ள மக்களுக்கு ஈரான் செம்பிறைச் சங்கம் வழங்கிய உதவிப் பொருட்கள் நாளை மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் உத்தியோகப10ர்வமாக கைளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெறவுள்ளதாகவும் ஈரான் செம்பிறைச் சங்கம் வழங்கவுள்ள இந்த நிவாரணப் பொருட்களில் ஒரு தொகுதி கூடாரங்கள் பாய்கள் மற்றும் பல பொருட்கள் இந்த உதவிப் பொருட்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-------------------------------

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் நேற்று வெகுவிமரிசையாக ஆரம்பிக்கப்பட்ட லிபியாவின்; 40வது சுதந்திரதின வைபவ நிகழ்வுகளில் இலங்கை இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதை விசேட அம்சமாக இடம்பெற்றுள்ளது.

சுதந்திரதின வைபவத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏனைய 40 நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் தலைவர்களுடன் இந்த நிகழ்வுகளைப் பார்வையிட்டுள்ளதாகவும் லிபியப் புரட்சி மூலம் கேணல் முஅம்மர் கடாபியால் நாட்டில் ஏற்படுத்தப்பட்;டுள்ள அபிவிருத்தியை பறைசாற்றும் நிகழ்வாக இந்த சுதந்திரக் கொண்டாட்டம் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரதின வைபவத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து தனித்தனியாக இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி குளோரியா அரோயா மற்றும் பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தனித்தனியாக சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதுடன் இன்று மாலை வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவஸ{டன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<<முன்னைய பதிவுகள்>>

 

Last update: 20-06-2008. Desigin and Copyright Welcome. to Visit.Engaltheaasam.com ..!