<%@ Language=JavaScript %> Welcome./\. Welcome. !
 

எங்கள் தேசம் இணையம்

 

www.engaltheaasam.com Welcome To Visit   

 
 

 

 

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.செப்டம்பர்,04, 2009

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

மியான்மர் நாட்டு ஜனநாயக தலைவர் ஆங் சாங் பதினெட்டு மாத சிறை தண்டனையை எதிர்த்து அப்பீல்.

மியான்மர் நாட்டு ஜனநாயக தலைவர் ஆங் சாங் சூகி,தனக்கு அளிக்கப்பட்டுள்ள 18 மாத சிறைத் தண்டனையை எதிர்த்து, கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடக்கிறது. கடந்த 90ம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி அமோக வெற்றி பெற்றார். ஆனால், அவரை வீட்டுச் சிறையில் அடைத்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

யாங்கூனின் புறநகர் பகுதியில் உள்ள ஏரி சூழ்ந்த வீட்டில் ஆங் சான் சூகி சிறை வைக்கப்பட்டுள்ளார்.பல ஆண்டுகளாக சிறையில் உள்ள சூகியை பார்ப்பதற்காக கடந்த மே மாதம், அமெரிக்க நாட்டவரான ஜான் எட்டாவ், மியான்மர் அரசின் அனுமதி பெறாமல், ஏரியில் நீந்தி சூகியை சந்தித்தார்.மியான்மர் நாட்டின் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக ஜான் எட்டாவ் கைது செய்யப்பட்டார்.எட்டாவை ரகசியமாக சந்தித்ததாக சூகி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.கடந்த மாதம் 11ம் தேதி இந்த வழக்கில் எட்டாவுக்கு ஏழாண்டு சிறைத் தண்டனையும்,சூகிக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.பின்னர்,இந்த தண்டனையை ராணுவ அரசு, 18 மாதங்களாகக் குறைத்தது.அதாவது,மியான்மரில் அடுத்த ஆண்டு நடக்கும் பொதுத் தேர்தல் முடியும் வரை சூகி வீட்டுச் சிறையில் இருக்க வேண்டும் என்பது தான் ராணுவ அரசின் திட்டம்.

மியான்மர் அரசின் இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயந்து எட்டாவை விடுவித்து விட்டது மியான்மர் அரசு. இந்நிலையில், தனக்கு விதிக்கப் பட்ட 18 மாத தண்டனையை ரத்து செய்யக் கோரி, சூகி சார்பில், அவரது வக்கீல் நியான் வின், கோர்ட்டில் நேற்று அப்பீல் மனு தாக்கல் செய் தார்.இன்று இந்த மனு தொடர்பான விசாரணை நடக்க உள்ளது.

<<முன்னைய பதிவுகள்>>

 

Last update: 20-06-2008. Desigin and Copyright Welcome. to Visit.Engaltheaasam.com ..!