தோழர்
சிவதாசன் அவர்களின் மறைவிற்கு கனடியத்
தோழர்களின் அஞ்சலி!
நீண்டகால
இடதுசாரி
அரசியல்
செயற்பாட்டாளரும்
தொழிற்சங்கத்
தலைவருமான
தோழர்
எஸ்.சிவதாசன்
அவர்கள்
2011
நவம்பர்
13ம்
திகதி
தமது
77வது
வயதில்
காலமான
செய்தி
கேட்டு
கனடாவில்
வாழ்கின்ற
இலங்கையைத்
தாயகமாகக்
கொண்ட
அனைத்து
முற்போக்கு
சக்திகளும்
ஆறாத்துயரில்
ஆழ்ந்துள்ளோம்.
தோழர்
சிவதாசன்
தனது
மாணவப்
பருவத்திலேயே
இலங்கையின்
கம்யூனிஸ்ட்
இயக்கத்துடன்
தன்னை
இணைத்துக்
கொண்டவர்.
கடந்த
50
ஆண்டுகளுக்கும்
மேலாக
அவர்
அந்த
இயக்கத்தின்
கொள்கைகளில்
நிலை
தழும்பாது
நின்று
வந்துள்ளார்.
தேசிய
இனப்பிரச்சினை
தீவிரமடைந்து
அது
ஆயுதப்போராட்டமாகப்
பரிணமித்த
காலகட்டத்தில்
அவர்
சில
முற்போக்குத்
தமிழ்
தேசியவாத
இயக்கங்களுடன்
தன்னை
இணைத்து
வேலை
செய்தாராயினும்
அங்கும்
தமது
இடதுசாரிக்
கொள்கைகளின்
அடிப்படையிலேயே
செயற்பட்டார்.
கம்யூனிஸ்ட்
கட்சியின்
தொழிற்சங்க
இயக்கத்தில்
அவர்
ஆற்றிய
பங்குபணி
மகத்தானதாகும்.
திருகோணமலையில்
அவர்
தொழிற்சங்கப்
பிரதிநிதியாக
இருந்த
காலத்தில்
அங்கு
துறைமுகத்
தொழிலாளர்களை
அமைப்புரீதியாகத்
திரட்டுவதிலும்
அவர்களது
கோரிக்கைகளை
வென்றெடுப்பதிலும்
முக்கியமான
பங்களிப்பை
வழங்கினார்.
அக்காலகட்டத்தில்
அங்கு
கட்சி
மற்றும்
சமூகப்
பணிகளையும்
முன்னெடுத்தார்.
குறிப்பாக
அங்குள்ள
அரச
ஊழியர்கள்
மத்தியில்
செல்வாக்கு
மிகுந்த
ஒருவராகத்
திகழ்ந்தார்.
அதன்பின்னர்,
அவர்
1960களின்
நடுக்கூறில்
யாழ்ப்பாண
மாவட்டத்துக்கான
தொழிற்சங்கப்
பிரதிநிதியாக
நியமிக்கப்பட்ட
பின்னர்
வட
பிராந்திய
இலங்கைப்
போக்குவரத்துச்சபை
காங்கேசன்
சீமெந்துத்
தொழிற்சாலை
வல்லை
நெசவாலை
ஆனையிறவு
உப்புக்
கூட்டுத்தாபனம்
பரந்தன்
இரசாயனத்
தொழிற்சாலை
மில்க்வைற்
சவர்க்காரத்
தொழிற்சாலை
போன்ற
இடங்களில்
செயற்பட்டுக்
கொண்டிருந்த
கட்சியின்
தொழிற்சங்க
அமைப்புகளை
மேலும்
பலப்படுத்தியதுடன்
அங்கு
நடைபெற்ற
வெற்றிகரமான
தொழிற்சங்கப்
போராட்டங்களுக்கு
சிறப்பான
முறையில்
தலைமைத்துவமும்
வழங்கினார்.
தொழிலாளர்களின்
பிரச்சினைகளின்
பொருட்டு
தொழில்
நீதிமன்றங்களிலும்
சிறப்பாக
வாதிட்டார்.
அத்துடன்
நின்றுவிடாது,
அக்காலகட்டத்தில்
கட்சியால்
வட
பகுதியெங்கும்
பரந்த
அளவிலும்
தீவிரமாகவும்
முன்னெடுக்கப்பட்ட
தீண்டாமைக்கெதிரான
போராட்டங்களில்
அர்ப்பணிப்புடன்
ஈடுபட்டார்.
விவசாயப்
பகுதிகளில்
நடைபெற்ற
போராட்டங்களிலும்
ஆர்வத்துடன்
கலந்து
கொண்டார்.
இந்தக்
காலகட்டங்களில்
சில
சந்தர்ப்பங்களில்
பொலிசாரால்
கைதுசெய்யப்பட்டதுடன்
அவர்களின்
தாக்குதலுக்கும்
உள்ளானார்.
சில
சந்தர்ப்பங்களில்
தலைமறைவாகவும்
வாழ்ந்தார்.
தமிழ்
இளைஞர்களின்
ஆயுதப்போராட்டம்
ஆரம்பமான
பின்னர்
தன்னை
முற்போக்குத்
தேசிய
இயக்கங்களுடன்
இணைத்துக்
கொண்டார்.
அதன்
காரணமாக
வலதுசாரி
புலிகள்
இயக்கத்தால்
கைதுசெய்யப்பட்டு
பல
மாதங்கள்
சித்திரவதை
செய்யப்பட்டார்.
அதன்
பின்னரும்
அவர்
பனம்பொருள்
அபிவிருத்திச்
சபையின்
தலைவராக
இருந்த
காலத்தில்
அவர்
பயணித்த
வாகனத்தில்
புலிகள்
வைத்த
குண்டு
வெடித்ததால்
பலத்து
காயங்களுக்கு
உள்ளாகி
மயிரிழையில்
உயிர்தப்பிப்
பிழைத்தார்.
தமிழ்
-
சிங்களம்
-
ஆங்கிலம்
என
மும்மொழிகளிலும்
பாண்டித்தியம்
பெற்றிருந்த
தோழர்
சிவதாசன்
கட்சிப்
பொதுக்கூட்டங்கள்
மாநாடுகள்
கருத்தரங்குகள்
என்பனவற்றில்
சிறந்த
சமகால
மொழிபெயர்ப்பாளராச்
செயலாற்றியுள்ளார்.
சில
வருடங்கள்
இலங்கை
பெற்ரோலியக்
கூட்டுத்தாபனத்தில்
பணியாற்றியபோது
அங்கும்
மொழிபெயர்ப்பாளராகக்
கடமையாற்றினார்.
இனப்பிரச்சினை
கூர்மையடைந்த
காலத்தில்
ஈ.பி.ஆர்.எல்.எப்
இயக்கத்துடன்
இணைந்து
பணியாற்றிய
தோழர்
சிவதாசன்
வட
கிழக்கு
மாகாணசபையின்
உறுப்பினராகவும்
தெரிவு
செய்யப்பட்டார்.
அதன்
பின்னர்
கம்யூனிஸ்ட்
கட்சியில்
தன்னுடன்
இணைந்து
பணியாற்றிய
தோழர்
கதிரவேலு
அவர்களின்
புதல்வர்
டக்ளஸ்
தேவானந்தா
ஈ.பி.டி.பி
கட்சியை
உருவாக்கிய
போது
தன்னை
அதனுடன்
இணைத்துக்
கொண்டார்.
அக்கட்சியின்
சார்பாக
இரு
தடவைகள்
பாராளுமன்ற
உறுப்பினராகவும்
தெரிவு
செய்யப்பட்டார்.
பனம்பொருள்
அபிவிருத்திச்
சபையின்
தலைவராகவும்
கடமையாற்றி
பனை
வளம்
பெருக
உழைத்தார்.
ஆழமான
தோழமை
உணர்வு
காரணமாக
தோழர்
கதிரவேலு
அவர்களின்
சகோதரி
முறையானவரையே
தனது
வாழ்க்கைத்
துணைவியாகவும்
வரித்துக்
கொண்டார்.
சில
வருடங்களுக்கு
முன்னர்
மனைவியையும்
இழந்துவிட்ட
தோழர்
சிவதாசன்
பிள்ளைகளும்
இல்லாதபடியால்
இறுதிக்
காலத்தைத்
தனது
அரசியல்
தோழர்களின்
துணையுடனேயே
யாழ்ப்பாணத்தில்
கழித்தார்.
தோழர்
சிவதாசன்
தான்
மரணிக்கும்வரை
தனது
அரசியல்
வாழ்வின்
ஆரம்பத்தில்
வரித்துக்கொண்ட
இடதுசாரி
-
முற்போக்குக்
கொள்கையையே
இறுதிவரை
உறுதியுடன்
கடைப்பிடித்தார்.
எப்பொழுதும்
கட்சித்
தோழர்களுடனும்
சுரண்டப்பட்ட
ஒடுக்கப்பட்ட
மக்களுடனும்
நெருக்கமான
தொடர்புகளைப்
பேணி
வந்தார்.
அவரது
மறைவு
அனைத்து
முற்போக்கு
சக்திகளுக்கும்
உழகைகும்
மக்களுக்கும்
ஈடுசெய்ய
முடியாத
ஒன்றாகும்.
தோழர்
சிவதாசன்
அவர்களின்
மறைவால்
வாடும்
அவரது
உறவினர்களுக்கும்
தோழர்களுக்கும்
கனடா
வாழ்
இலங்கைத்
தோழர்களின்
ஆழ்ந்த
அனுதாபங்களைத்
தெரிவித்துக்
கொள்வதுடன்
தோழர்
சிவதாசனுக்கு
எமது
இறுதி
அஞ்சலியையும்
தெரிவித்துக்
கொள்கின்றோம்.
கனடா
வாழ்
தேழர்களின்
சார்பாக
சி.தர்மராசன்
வட
பிராந்திய
முன்னாள்
தலைவர்
இலங்கை
மோட்டார்
தொழிலாளர்
(இ.போ.ச)
சங்கம்.